Wednesday, June 14, 2023
Monday, June 12, 2023
பாயுமொளி நீ எனக்கு - பாரதியார் பாடல்கள்
பாயுமொளி நீ எனக்கு பார்க்கும் விழி நான் உனக்கு
தோயும் மது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுவதில்லை வாழிநின்றன் மேன்மை எல்லாம்
தூய சுடர் வானொலியே சூரையமுதே கண்ணம்மா...
வீணையடி நீ எனக்கு மேவும் விறல் நானுனக்கு
பூணும் வடம் நீ எனக்கு புது வைரம் நான் உனக்கு
காணுமிடந்தோறும் நின்றான் கண்ணினொளி வீசுதடி
மானுடைய பேரரசே வாழ்வு நிலையே கண்ணம்மா...
வான மழை நீ எனக்கு வண்ண மயில் நான் உனக்கு
பானமடி நீ எனக்கு பாண்டமடி நான் உனக்கு
ஞான ஒளி வீசுதடி நங்கை நின்றன் ஜோதிமுகம்
ஊனமறு நல்லழகே ஊரு சுவையே கண்ணம்மா....
வெண்ணிலவு நீ எனக்கு மேவு கடல் நான் உனக்கு
பண்ணுசுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு
எண்ணி எண்ணி பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே
கண்ணின் மணி போன்றவளே கட்டியமுதே கண்ணம்மா....
வீசுகமழ் நீ எனக்கு விரியுமலர் நான் உனக்கு
பேசுபொருள் நீ எனக்கு பேணுமொழி நான் உனக்கு
நேசமுள்ள வான்சுடரே நின்னழகாய் எத்துறைப்பேன்
ஆசை மதுவே கனியே அல்லு சுவையே கண்ணம்மா....
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதமுற்ற போதினிலே பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதவடிவானவளே நல்ல உயிரே கண்ணம்மா....
நல்லவுயிர் நீ எனக்கு நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு சேமநிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே எங்கும் நிறை பொற்சுடரே
முல்லை நிகர் புன்னகையை மோதுமின்பமே கண்ணம்மா...
தாரையாடி நீ எனக்கு தண்மதியம் நான் உனக்கு
வீரமடி நீ எனக்கு வெற்றியடி நான் உனக்கு
தரணியில் வானுலகத்தில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்
ஓருருவமாய் சமைந்தாய் உள்ளமுதே கண்ணம்மா....!!!

Sunday, November 4, 2012
கருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்
அம்மா!
என் பிறப்பின் நேரம் நெருங்கி விட்டது.
அதற்கு முன் என் கடிதத்திற்கு பதில் அளித்து விடு...
கருவில் என்னை நீ சுமந்து கொண்டு இருக்கும் போதே
அண்ணல் காந்தியைப் பற்றிப் படித்தாய்.
மாமா நேருவைப் பற்றி படித்தாய்.
அப்துல்கலாமை பற்றி படித்தாய்.
நேதாஜி, விவேகானந்தன், பகத் சிங்
பற்றியெல்லாம் படித்தாய்.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்
பற்றியும் படித்தாய்.
ராமாயணம், இதிகாசம், பகவத் கீதை
பற்றிக்கூட படித்தாய்.
தவறு செய்யும் மனிதனுக்கு என்ன
தண்டனை கிடைக்கும் என்பதற்க்கான
நீதிக் கதைகளையும் படித்தாய்.
பாரத பூமியைப் பற்றிப் படித்தாய்.
பக்கத்து நாடுகளைப் பற்றியும் படித்தாய்.
இந்தியக் கலாச்சாரம், குடும்பம், பாரம்பரியம்
பற்றிகூட படித்தாய்.
யுத்தம், வரலாறு, அறிவியல்
பற்றியும் படித்தாய்.
இந்திய அரசியலையும் படித்தாய்.
எனக்காக A,B,C,D, அ, ஆ வையும்
சேர்த்து படித்தாய்.
நல்லவர்களைப் பற்றிப் படித்தாய்.
போராளிகளைப் பற்றிப் படித்தாய்.
ஆனால் அம்மா,
எந்தவித பாவமும் செய்யாமல்
போராட்டத்துடனே பிறந்து
அனாதைகளாக்கப்பட்ட
என் போன்ற மழலைகளின் நிலைப்பற்றி
ஏனம்மா படிக்கவில்லை.....?
பிறந்த தேதி தெரியாவிட்டாலும்
பரவாயில்லை....
உயிர் கொடுத்த தகப்பன் பெயர்
தெரியாவிட்டாலும் பரவாயில்லை....
ஆனால்
பெற்றவளே யார் என்று
தெரியாமல் இருப்பது
எவ்வளவுப் பெரிய அவமானம் என்பதை
நீ அறிவாயா?
தன் பிறந்த நாள் தெரியாத அனாதைக்
குழந்தைகள், அடுத்தவனுக்கு என்று
பிறந்த நாள் வரும் என்று ஏங்குகின்றனர்
ஒரு வேலை சோறிடுவார்கள் என்பதற்காக....
அனாதைகளுக்கும் அம்மா, ஆசை, பாசம், ஏக்கம்,
அன்பு, பண்டிகை இவையெல்லாம்
உண்டு தானே?
என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்
இவையெல்லாம் நிராகரிக்கப்படுவதற்கு.......?
அன்னையே!
அனாதைகளைப் பற்றி ஏன் படிக்கவில்லை
என்று உன் மீது குற்றம் சுமத்துவதற்காக
இவை எல்லாம் சொல்லவில்லை.
எதிர் காலத்தில் என் நிலைமையும்
இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காக
சொல்கிறேன்........
அன்னையே!
கேட்பதற்காக என்னை மனித்து விடு..
என் பிறப்பு அங்கீகாரம் வாய்ந்தது என்றால்
என் பிறப்பின் பின்
அப்பன், ஆத்தாள் பெயர் தெரியாத
அவமானம் நேராது என்றால்
தாயே எனை பெற்று எடு......
இல்லையேல் கருவிலேயே
கருணைக் கொலை செய்து விடு.......
என் பிறப்பின் நேரம் நெருங்கி விட்டது.
அதற்கு முன் என் கடிதத்திற்கு பதில் அளித்து விடு...
கருவில் என்னை நீ சுமந்து கொண்டு இருக்கும் போதே
அண்ணல் காந்தியைப் பற்றிப் படித்தாய்.
மாமா நேருவைப் பற்றி படித்தாய்.
அப்துல்கலாமை பற்றி படித்தாய்.
நேதாஜி, விவேகானந்தன், பகத் சிங்
பற்றியெல்லாம் படித்தாய்.
கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ்
பற்றியும் படித்தாய்.
ராமாயணம், இதிகாசம், பகவத் கீதை
பற்றிக்கூட படித்தாய்.
தவறு செய்யும் மனிதனுக்கு என்ன
தண்டனை கிடைக்கும் என்பதற்க்கான
நீதிக் கதைகளையும் படித்தாய்.
பாரத பூமியைப் பற்றிப் படித்தாய்.
பக்கத்து நாடுகளைப் பற்றியும் படித்தாய்.
யுத்தம், வரலாறு, அறிவியல்
பற்றியும் படித்தாய்.
இந்திய அரசியலையும் படித்தாய்.
எனக்காக A,B,C,D, அ, ஆ வையும்
சேர்த்து படித்தாய்.
நல்லவர்களைப் பற்றிப் படித்தாய்.
போராளிகளைப் பற்றிப் படித்தாய்.
ஆனால் அம்மா,
எந்தவித பாவமும் செய்யாமல்
அனாதைகளாக்கப்பட்ட
என் போன்ற மழலைகளின் நிலைப்பற்றி
ஏனம்மா படிக்கவில்லை.....?
பிறந்த தேதி தெரியாவிட்டாலும்
பரவாயில்லை....
உயிர் கொடுத்த தகப்பன் பெயர்
தெரியாவிட்டாலும் பரவாயில்லை....
ஆனால்
பெற்றவளே யார் என்று
தெரியாமல் இருப்பது
எவ்வளவுப் பெரிய அவமானம் என்பதை
நீ அறிவாயா?
தன் பிறந்த நாள் தெரியாத அனாதைக்
குழந்தைகள், அடுத்தவனுக்கு என்று
பிறந்த நாள் வரும் என்று ஏங்குகின்றனர்
அனாதைகளுக்கும் அம்மா, ஆசை, பாசம், ஏக்கம்,
அன்பு, பண்டிகை இவையெல்லாம்
உண்டு தானே?
என்ன பாவம் செய்தார்கள் அவர்கள்
இவையெல்லாம் நிராகரிக்கப்படுவதற்கு.......?
அன்னையே!
அனாதைகளைப் பற்றி ஏன் படிக்கவில்லை
என்று உன் மீது குற்றம் சுமத்துவதற்காக
இவை எல்லாம் சொல்லவில்லை.
எதிர் காலத்தில் என் நிலைமையும்
இப்படி ஆகி விடக் கூடாது என்பதற்காக
சொல்கிறேன்........
அன்னையே!
கேட்பதற்காக என்னை மனித்து விடு..
என் பிறப்பு அங்கீகாரம் வாய்ந்தது என்றால்
அப்பன், ஆத்தாள் பெயர் தெரியாத
அவமானம் நேராது என்றால்
இல்லையேல் கருவிலேயே
கருணைக் கொலை செய்து விடு.......
Subscribe to:
Posts (Atom)