காற்றுக் கூட புக முடியாத கல்லறையில் இருந்தாலும் நட்பின் சுவாசத்தை தேடுபவள்.... இருக்க இடமில்லை, குடிக்க கூழ் இல்லை உடுக்க உடை இல்லை என்றாலும் இந்தியாவின் உயர்வைப் பற்றி எண்ணுபவள்... மனிதர்கள் ஜாதியையும், பணத்தையும் பகட்டு வாழ்க்கையையும் நாடிக்கொண்டிருக்கையில் மனித நேயத்தை மட்டும் தேடிக் கொண்டிருப்பவள்..... வீதிக்கொரு அநாதை இல்லத்தை வறுமையில் வாடவிட்டு கோவிலின் உண்டியலை நிரப்பும் மனிதர்களை எண்ணி சத்தம் இல்லாமல் புலம்பிக் கொண்டிருப்பவள்... வீதிக்கொரு அநாதை இல்லத்தையும் தெருவுக்கொரு முதியோர் இல்லத்தையும் உருவாக்க காரணமான பாவிகளை நினைத்து சாடிக் கொண்டிருப்பவள்...... இந்தியாவைப் போலவே என் மக்களை மட்டுமல்ல அவர்களின் மனதையும் ஏன் ஊனமாக படைத்தாய் இறைவா என்று கடவுளிடமே நீதி கேட்பவள்... ஈடேறாத என் ஏடு ஏறிய ஆசைகளை படித்து சிரித்துவிட்டு பிறகேனும் சிந்தியுங்கள்......
No comments:
Post a Comment